কলিটোকেই (Kalithokai ) Poem Nos. 9, 51

 

கலித்தொகை 9

 

“எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,

உறித்தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,

நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ்இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை,

என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்,

தம்முளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்;

அன்னார் இருவரைக் காணிரோ? -  பெரும!”

“காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை;

ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்!

 

பல உறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?

நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

 

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,

நீருளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?

தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

 

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,

யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

 

என ஆங்கு-

 

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;

அறம்தலை பிரியா ஆறும் மற்று அதுவே”.

 

- பாலை பாடிய பெருங்கடுங்கோ

 

குறிப்பு: உடன்போகிய தலைவியை பற்றி வினவிய செவிலித்தாக்கு  துறவி சொல்லியது.

 

কলিটোকেই জ্ঝ

 

তোলনীয়া মাতৃগৰাকী মুনিবৰ আৰু তেওঁৰ শিষ্যসকলৰ প্ৰতি ঃ

হে পণ্ডিত সত্যবাদী, যাৰ হৃদয়ে সততাৰ বহিৰে একো নাভাবে,

যিয়ে পঞ্চ ইন্দ্ৰিয়ক নিয়ন্ত্ৰণ কৰিব পাৰে,

সূৰ্যৰ প্ৰখৰ ৰ’দৰ পৰা ৰক্ষা পাবলৈ ছাতি মেলি আছে,

কমণ্ডলুৰে সৈতে উত্তপ্ত জনশূন্য পথৰ মাজেৰে গৈ থকা হে প্ৰভু,

আপুনি মোৰ কন্যাক অন্য এগৰাকী নাৰীৰ পুত্ৰৰ সৈতে দেখিছিল            নেকি,

যি গোপনে মিলিত হৈছিল,

এতিয়া সেই মিলনৰ বিষয়ে সকলোৱে জানিলে৷

মুনিবৰঃ

এইটো নহয় যে আমি তেওঁলোকক দেখা নাছিলোঁ৷

অৰণ্যৰ পথটোত আমি তেওঁলোকক দেখিছিলোঁ৷

তুমি চাগৈ সেই সুন্দৰ অলংকাৰ পৰিধান কৰা যুৱতীগৰাকীৰ মাতৃ,

যিয়ে কাঁইটীয়া পথটোৱেদি সুদৰ্শন যুৱকজনৰ সৈতে গৈ আছিল৷

চন্দন ঘঁহাসকলৰ বাহিৰে তাক উৎপন্ন কৰা

পাহাৰ-পৰ্বতৰ জানো চন্দনৰ প্ৰয়োজনীয়তা আছে?

যেতিয়া এই বিষয়ে ভবা যায়,

তোমাৰ কন্যাও ঠিক তোমাৰ বাবে তেনেকুৱা/

যিসকলে পৰিধান কৰে তেওঁলোকৰ বাহিৰে qw মুকুতা

জানো সাগৰৰ বাবে প্ৰয়োজনীয়?

যেতিয়া এই বিষয়ে ভবা যায়,

তোমাৰ কন্যাও ঠিক তোমাৰ বাবে তেনেকুৱাক্ক

শ্ৰোতাসকলৰ বাহিৰে য়াল বাদ্যযন্ত্ৰই সৃষ্টি কৰা

সপ্তসুৰক য়ালৰ জানো প্ৰয়োজন আছে?

যেতিয়া এই বিষয়ে ভবা যায়,

তোমাৰ কন্যাও ঠিক তোমাৰ বাবে তেনেকুৱাক্ক

গুচি যোৱা পুত্ৰীৰ বাবে দুখ নকৰিবা৷

তাই নিজৰ উপযুক্ত পুৰুষজনৰ সৈতে শুদ্ধ পথতে গৈছে৷

সেয়া আটাইতকৈ ধাৰ্মিক পথক্ক

                   - পালই পাডিয় পেৰুন কডুনকো

 

টোকাঃ নায়িকাৰ তোলনীয়া মাতৃ আৰু মুনিবৰৰ সৈতে হোৱা কথোপকথন৷

 

கலித்தொகை 51

 

சுடர் தொடீஇ! கேளாய்! - தெருவில் நாம் ஆடும்

மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,

நோதக்க செய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே!

உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு, அன்னை,

“அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடர் இழாய்!

உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என, யானும்

தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை

வளைமுன் கைபற்றி நலிய, தெருமந்திட்டு,

“அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்

“உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்

செய்தான், அக்கள்வன் மகன்.

 

- கபிலர்

குறிப்பு: தலைவி தோழியிடம் சொல்லியது.

 


কলিটোকেই ৫১

জিক্‌মিকাই থকা খাৰু পৰিহিতা মোৰ সখী, শুনাক্ক

সেই দুষ্ট ল’ৰাটো যিয়ে সদায় পথৰ কাষত

সজা আমাৰ সৰু বালিঘৰবোৰ ভৰিৰে গুৰিয়াই

ভাঙিছিল, চুলিৰপৰা ফুলবোৰ এৰুৱাই

নিছিল আৰু অশান্তি কৰিবলৈ আমাৰ

আঁক-বাক থকা বলবোৰ লৈ যায়, সি

এদিন মা আৰু মই থকা অৱস্থাত

ঘৰলৈ আহে৷

‘‘হে ... এই ঘৰৰ মানুহবোৰক্ক দয়া কৰি

মোক অলপ পানী দিয়ক’’, সি কৈছিল৷

মায়ে মোক কৈছিল,

‘‘সোণৰ পাত্ৰটোত পানী ভৰাই তাক

দিয়াগৈ’’,

আৰু মই জনা নাছিলো সি বুলি৷

মোৰ খাৰু পিন্ধা হাতখন ধৰি সি

জোৰেৰে চেপি দিলে, শংকাত ভুগি

মই চিঞৰিলোঁ, ‘‘মা, চোৱা সি কি কৰিছে৷’’

ভয়তে উধাতু খাই মোৰ মা দৌৰি আহিল আৰু

মই তেতিয়া মাক ক’লোঁ– ‘‘সি পানী পিওঁতে

চৰ্চৰণি খালে৷’’

মোৰ মায়ে তাৰ পিঠিটো আৰামেৰে মোহাৰি

ধীৰে ধীৰে পিবলৈ ক’লে৷

সি মোলৈ মাৰাত্মক চাৱনিৰে চাই

আছিল৷ তাৰ পাছত বন্ধুসুলভ হাঁহি মাৰিলে,

সেই চোৰটোক্ক

                                  - কপিলাৰ

টোকাঃ নায়িকাই এটা ঘটনাৰ বিষয়ে তাইৰ সখীয়েকক কৈ আছিল৷

No comments:

Post a Comment